Posts

அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்புக் கூட்ட நிகழ்ச்சி (24-08-2024, சனிக்கிழமை).

Image
வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பு கூட்ட நிகழ்ச்சி (24-08-2024, சனிக்கிழமை)  அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு  கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.  தலைமை ஆசிரியர்  திரு. மு. முத்துக்குமார் தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு செய்து வரும் பணிகள் குறித்தும்பேசினார்.இதில் பள்ளி மேலாண்மை குழுக்களில் புதிதாக 24 உறுப்பினர்கள் தலைவர், துணைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உறுப்பினர்கள், பெற்றோர் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சுய உதவிகுழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 24 உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் மேற்பார்வையாளராக  இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா,  கோமாபுரம் அரும்பு, வீராசாமி, பன்னீர்செல்வம், ...

தேசிய விண்வெளி தின கொண்டாட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி(23-08-2024, வெள்ளிக்கிழமை)

Image
வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. (23-08.2024, வெள்ளிக்கிழமை)  நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. கணித ஆசிரியர் திரு. சோ.சரவணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.  பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு. மு.முத்துக்குமார் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் அ.ரகமத்துல்லா கலந்து கொண்டு இந்திய தேசிய விண்வெளி தினம் குறித்து விளக்கினார். கடந்த ஆண்டு நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறக்கி சாதனை புரிந்தது. இந்த நிகழ்வின் நினைவாக இந்த ஆண்டு(2024) முதல் நமது இந்திய நாட்டின் தேசிய விண்வெளி தினம் கொண்டாடுகிறோம் என்பதனை மாணவ, மாணவிகளுக்கு தெரிவித்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை புரிந்த சாதனைகள் பற்றியும் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.மு.முத்துக்குமார் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் பேசினார். மேலும் விண்வெளி பற்றியும், விண்வெளி சார் படிப்புகள் குறித்தும், விண்வெளித்துறையில் சாதனை புரிந்த தமிழர்களான அப்...

நமது இந்திய நாட்டின் 78வது விடுதலை தின நாள் கொண்டாட்டம்(15.08.2024,வியாழன்). அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி 613301.

Image
நமது இந்திய நாட்டின் 78வது விடுதலை தின விழா வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பெரியோர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளியின் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விடுதலை தின விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் இந்திய நாடு எவ்வாறு விடுதலை பெற்றது என்பது பற்றியும், விடுதலை தின விழாவின் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றியும் இந்திய நாடு விடுதலைக்கு பின்னர் கடந்து வந்த பாதைகள் பற்றியும், நாட்டின் சாதனைகள் பற்றியும், இனி வரும் காலங்களில் நாம் எவ்வாறு பயணிக்க வேண்டும் அதற்கு இந்திய நாட்டின் நாளைய தலைவர்களான நீங்கள் ( மாணவ, மாணவிகள்) என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஆசிரியர்கள்,ஊர் பெரியோர்கள்,அறிவுரைக் கூறினார்கள்.இறுதியில் தமிழ் ஆசிரியை திருமதி.சத்தியபாமா நன்றியுரை வழங்கினார். விழா இனிதே நிறைவுப் பெற்றது.  அரசு ...