தேசிய விண்வெளி தின கொண்டாட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி(23-08-2024, வெள்ளிக்கிழமை)

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. (23-08.2024, வெள்ளிக்கிழமை) 

நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. கணித ஆசிரியர் திரு. சோ.சரவணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். 

பள்ளித் தலைமை ஆசிரியர் 
திரு. மு.முத்துக்குமார் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் அ.ரகமத்துல்லா கலந்து கொண்டு இந்திய தேசிய விண்வெளி தினம் குறித்து விளக்கினார்.

கடந்த ஆண்டு நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறக்கி சாதனை புரிந்தது. இந்த நிகழ்வின் நினைவாக இந்த ஆண்டு(2024) முதல் நமது இந்திய நாட்டின் தேசிய விண்வெளி தினம் கொண்டாடுகிறோம் என்பதனை மாணவ, மாணவிகளுக்கு தெரிவித்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை புரிந்த சாதனைகள் பற்றியும் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.மு.முத்துக்குமார் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் பேசினார்.

மேலும் விண்வெளி பற்றியும், விண்வெளி சார் படிப்புகள் குறித்தும், விண்வெளித்துறையில் சாதனை புரிந்த தமிழர்களான அப்துல் கலாம் ஐயா, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வளர்மதி, அருணன்
சுப்பையா, வீரமுத்து வேல் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் திரு. அ.ரகமத்துல்லா மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். 


நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சத்தியபாமா, முத்துமீனா, நிர்மலா, பாரதி ராஜா சக்தி மணிகண்டன், பணியாளர்கள் சுரேஷ், ஜெயா, மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

நிறைவாக ஆங்கில ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது. 

🙏🙏🙏



Comments

Popular posts from this blog

நமது இந்திய நாட்டின் 78வது விடுதலை தின நாள் கொண்டாட்டம்(15.08.2024,வியாழன்). அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி 613301.

அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்புக் கூட்ட நிகழ்ச்சி (24-08-2024, சனிக்கிழமை).