அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்புக் கூட்ட நிகழ்ச்சி (24-08-2024, சனிக்கிழமை).

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பு கூட்ட நிகழ்ச்சி (24-08-2024, சனிக்கிழமை) 

அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 
கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 
தலைமை ஆசிரியர் 
திரு. மு. முத்துக்குமார் தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு செய்து வரும் பணிகள் குறித்தும்பேசினார்.இதில் பள்ளி மேலாண்மை குழுக்களில் புதிதாக 24 உறுப்பினர்கள் தலைவர், துணைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உறுப்பினர்கள், பெற்றோர் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சுய உதவிகுழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 24 உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் மேற்பார்வையாளராக  இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, 
கோமாபுரம் அரும்பு, வீராசாமி, பன்னீர்செல்வம், பாஸ்கரன், சிவசங்கரன் மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. வி.கு.பூபதி,கடந்த பள்ளி மேலாண்மை குழு (2022-2024)தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள்,ஊர் பெரியோர்கள்,பெற்றோர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. வி.கு.பூபதி சான்றிதழ் வழங்கி பாராட்டிப் பேசினார்.

புதிதாக பொறுப் பேற்றுக்கொண்ட பள்ளி
மேலாண்மை குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அரசு பள்ளிகளை வலுப்படுத்துவது சார்ந்து அரசாங்கம் தயாரித்துள்ள உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது. 



Comments

Popular posts from this blog

தேசிய விண்வெளி தின கொண்டாட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி(23-08-2024, வெள்ளிக்கிழமை)

நமது இந்திய நாட்டின் 78வது விடுதலை தின நாள் கொண்டாட்டம்(15.08.2024,வியாழன்). அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி 613301.